“பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்” பொறாமை ஒரு மோசமான குணம். அது மனிதனை ஷைத்தானாக மாற்றி விடும் தன்மை கொண்டது. பொறாமைக்காரன் மன நிறைவு அடைய முடியாது. அவன் யார் மீது பொறாமை கொண்டோனோ அவர் அடையும் வீழ்ச்சிதான் அவனை அமைதிப்படுத்தும். உண்மையில்
மனிதன் அவசரப்படக்கூடியவனாக இருக்கிறான் என்கிறது திருக்குர்ஆன். அவசரம் அவனது இயல்பில் உள்ள ஒன்று. ஆனாலும் அந்த அவசரத்திற்கு கட்டுப்படாமல் நிதானமாகச் செயல்படுபவர்களே அதன் பாதிப்புகளிலிருந்து தப்புகிறார்கள். உணர்ச்சி மேலிடும்போது மனிதன் அவசரக்காரனாக மாறுகிறான். அவசரப்பட்டு அளவுகடந்து புகழ்கிறான். அவசரப்பட்டு சாபம் இடுகிறான். யாரை அவன் புகழ்ந்தானோ அவர்களை ஒரு
என் மனம் அவரிடம் கேட்டது: உங்களை இந்த அளவு அதிகமாக வெளிப்படுத்துகிறீர்களே? அதனால் நீங்கள் பெறும் பயன்தான் என்ன? மக்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அதன்மூலம் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை, அப்படி எந்த நோக்கமும் இல்லை. எனக்கு பெருமித
மார்க்கம் என்பது ஒரு வழிமுறை. அது எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இங்கு பல வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு உகந்த, தாங்கள் சரியெனக் கருதும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் எந்த மார்க்கத்தையும் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். முஸ்லிம்களாகிய
அன்பு என்றால் அது உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமல்ல. சில சமயங்களில் உங்களுக்குச் சிறைச்சாலையாகவும் அமைந்துவிடுவதுண்டு. அதன் மற்றொரு புறம் கோபமும் வெறுப்பும் அதீத உரிமையும் இருக்கின்றன. இங்கு எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிடாது. அதற்குப் பகரமாக ஏதேனும் ஒன்றை நீங்கள் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றை நீங்கள்
மனிதர்களுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. செல்வம், அறிவு, பதவி, அதிகாரம், மதம், சாதி, குலம் என எதையாவது அவர்கள் அதற்குப் பயன்படுத்தவே செய்கிறார்கள். இவையனைத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறியே. சாதியை ஒழித்துவிட்டால் சமத்துவம் நிலைநாட்டப்பட்டுவிடும் என்று
மனதில் பயம் தொற்றிக் கொண்டால் வாழ்க்கை நரகமாகி விடும். உறுதியான நம்பிக்கையைக் கொண்டே அந்த பயத்தை நீக்க முடியும். அது நம்மைப் படைத்துப் பராமரிக்கும் பேரிறைவனின் மீதான உறுதியான நம்பிக்கை. அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்னும் வலுவான நம்பிக்கை. அந்தப் பேரிறைவனை விட்டுவிட்டு நீங்கள் எதைப்
அந்த இடம் எனக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த இடத்தை சொர்க்கம் என்றுதான் நினைத்தேன். அந்த இடத்தின் அமைதி மனதில் அபூர்வமான உணர்வையும் அமைதியையும் ஏற்படுத்தியது. எனக்காகவே அந்த இடம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைத்தேன். வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அற்புதமான அனுபவம் அது. அந்த அனுபவம் குறுகிய காலம் அல்ல, நீண்ட
அதிகம் காட்டிக் கொள்பவர்கள் ஏன் அதற்கு மாறாக இருக்கிறார்கள்? அவர்கள் உணரும் தனிமைதான் அவர்களை அதிகம் காட்டிக் கொள்ளத் தூண்டுகிறதா? தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்ளும் தம்பதியினர் உண்மையில் அதற்கு மாறானவர்களாக இருக்கிறார்களே! அது ஏன்? சமூக ஊடகங்களில், பொதுத் தளங்களில் தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எல்லாம்
ஒரு விசயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் எனில் அதனை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதியான, தெளிவான குரலில் உங்களால் முன்வைக்க முடிந்தால் அது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் தன்னியல்பாகச் சென்றடைந்து விடும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும் என்பது இங்கு செயல்படும் விதி. அந்த வார்த்தையில் தெளிவும்